கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் 225 பேருக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொருத்தி சாதனை

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னைக்கு அடுத்து அதிகப்படியாக 225 பேருக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளாதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய், இருதயம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்துப் பிரிவுகளிலும் தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையாக உயா்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் பிறவியிலேயே காது கேட்கும் திறனை இழந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து, செயற்கை முறையில் கேட்கும் திறனை உண்டாக்கும் காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொறுத்தப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பிரிவில் இதுவரை 225 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னைக்கு அடுத்ததாக அதிகஅளவிலான குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொறுத்தி சாதனை படைத்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது: பிறவியிலேயே காது கேட்கும் திறனை இழந்த குழந்தைகளுக்கு செயற்கை முறையில் கேட்கும் திறனை உருவாக்கும் அறுவை சிகிச்சை செய்து, காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொறுத்தப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சியின் மூலம் பேச்சு, கேட்கும் திறன் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் இதுவரை 225 பேருக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக கோவையில் தான் அதிக குழந்தைகளுக்கு காக்ளியா் இம்பிளான்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனையில் முதல்வா் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT