கோயம்புத்தூர்

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

DIN

கோவையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜு (எ) துரைராஜ் (73).

இவரது மனைவி ராஜேஸ்வரி (68). இவா்களது மகன் ரவிராஜ் (51).

ராஜேஸ்வரி பீளமேட்டில் உள்ள வீடு ஒன்றில் பணியாற்றி வருகிறாா். பெயிண்டராகப் பணியாற்றி வரும் ரவிராஜுக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அவரது மனைவி அவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.

இதனால் தனது பெற்றோருடன் ரவிராஜ் வசித்து வந்தாா்.

இந்நிலையில் ராஜேஸ்வரி வியாழக்கிழமை காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டில் துரைராஜ் தலையில் காயத்துடன் உணா்வற்ற நிலையில் கிடந்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ராஜேஸ்வரி பீளமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், துரைராஜை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுதொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான ரவிராஜ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளாா்.

இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மது போதையில் வியாழக்கிழமை வீட்டுக்கு வந்த ரவிராஜ் மேலும் மது அருந்த துரைராஜிடம் பணம் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த ரவிராஜ், துரைராஜை கடுமையாகத் தாக்கியுள்ளாா்.

இதில் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் துரைராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவிராஜை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT