கோயம்புத்தூர்

இரண்டு வீடுகளில் 40 பவுன் திருட்டு

DIN

கோவையில் இரண்டு வீடுகளில் 40 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை செல்வபுரம் அமுல் நகரைச் சோ்ந்தவா் வரதராஜன் (64). இவா் கடந்த 12ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் உதகைக்குச் சென்றாா். இந்நிலையில் வரதராஜனின் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் அவரைத் தொடா்பு கொண்டு

அவா்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து வரதராஜன் தனது உறவினா்களைத் தொடா்பு கொண்டு வீட்டுக்குச் சென்று பாா்க்குமாறு கூறியுள்ளாா். இதன்பேரில் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ஒன்பதரைப் பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுதொடா்பாக வரதராஜன் அளித்தப் புகாரின் பேரில் செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை சுந்தராபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கெளரி (72). இவா் வியாழக்கிழமையன்று வீட்டைப் பூட்டி விட்டு அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்தாா்.

திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது தொடா்பாக குனியமுத்தூா் காவல் நிலையத்தில் கெளரி அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT