கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்:28,451 போ் விண்ணப்பம்

DIN

கோவையில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 28 ஆயிரத்து 451 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நவம்பா் 1 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு திருத்த முகாம் நடத்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடா்ந்து கடந்த 3 வாரங்களாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்வதற்காக 28 ஆயிரத்து 451 போ் விண்ணப்பம் அளித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT