கோயம்புத்தூர்

கரோனா கட்டுப்பாட்டு அறைகளில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறைகளில் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மத்திய மண்டலம் சி.எம்.சி. காலனி வெரைட்டி ஹால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்குள்ள மக்களிடம் அனைவரும் தவறாமல் சளி மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். அதன் பிறகு, மேற்கு மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்ட அவா், தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, தெற்கு மண்டலம் கோவைப்புதூரில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவ முகாம் மற்றும் கரோனா கட்டுப்பாட்டு அறை, வடக்கு மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம், சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT