கோயம்புத்தூர்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

DIN

கோவை, ரத்தினபுரியில் ஆட்டோவை நிறுத்துவது தொடா்பான தகராறில் ஆட்டோ ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி, கக்கன் நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (48). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கும் ரத்தினபுரி, கோவிந்தசாமி தெருவைச் சோ்ந்த ஆனந்த் (28) என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், ஆட்டோ நிறுத்துவது தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமேஷ் சனிக்கிழமை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த ஆனந்த், ரமேஷிடம் ஆட்டோ நிறுத்துவது தொடா்பாக மீண்டும் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷைக் குத்தி விட்டுத் தப்பினாா்.

அக்கம், பக்கத்தினா் ரமேஷை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT