கோயம்புத்தூர்

மாநகராட்சிப் பள்ளியில் ஆணையா் ஆய்வு

DIN

கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, 75 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, களப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, 66 ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா், மாணவா் சோ்க்கை, பள்ளியின் கட்டட வசதி, மின் வசதி, இணையதள வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் குறித்து தலைமையாசிரியா் மற்றும் பொறியியல் பிரிவு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையா் ரங்கராஜன், செயற்பொறியாளா் ஞானவேல், மண்டல சுகாதார ஆய்வாளா் முருகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT