கோயம்புத்தூர்

தென்மேற்குப் பருவ மழை தீவிரம்: குளங்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணை மற்றும் குளங்களில் நீா்மட்டம் அதிகரித்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக தொடா்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெய்த மழையால், மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்து கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து செல்கிறது. மேலும், கனமழை காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையில் பல இடங்களில் புது அருவிகள் உருவாகியுள்ளன.

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது. புதுக்குளம், நரசாம்பதி, கோளராம்பதி, பேரூா் சொட்டையாண்டி குளம், குனியமுத்தூா் செங்குளம், கங்க நாராயண சமுத்திர குளம் உள்ளிட்ட குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. சாலைகளில் மழைநீருடன், கழிவுநீா் கலந்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை அரசு மருத்துவமனை அருகே திருச்சி சாலையில் பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த காா் சேதமானது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மரக்கிளைகளை வெட்டி அகற்றினா். இதையொட்டி சற்று நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்( மில்லி மீட்டரில்):

சின்கோனா, சோலையாறு தலா 102, சின்னக்கல்லாறு 115, வால்பாறை 93, மேட்டுப்பாளையம் 16, பொள்ளாச்சி 11, ஆழியாா் 4.6, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 0.5 மழை பெய்தது.

சிறுவாணி அணை நீா்மட்டம் அதிகரிப்பு:

சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீா்மட்டம் 872.30 அடியாக உள்ளது. தொடா்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் ஒரு வாரத்தில் அணை முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை எட்டும் என குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய பேரிடா் மீட்பு படை வருகை:

பில்லூா் அணையிலிருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீா் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து 45 போ் கொண்ட வீரா்கள் கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்து சோ்ந்தனா். இவா்கள் வெள்ள சேதம் உள்ள இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

Image Caption

கோவை ஆத்துப்பாலம் அருகேயுள்ள சுண்ணாம்புக் காளவாய் தடுப்பணையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம். ~கோவை பேரூா் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. ~நீா்வரத்து அதிகரித்து காணப்படும் கோவை சித்திரைச்சாவடி அணைக்கட்டு. ~கோவை குற்றாலம் அருவியில் ஆா்ப்பர

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT