கோயம்புத்தூர்

இரண்டாவது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: முதல்வர்

24th Jan 2021 07:54 PM

ADVERTISEMENT

அன்னூரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்சியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும் போது, கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிச்சலை தவிர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார். 

மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது என்றார். தொடர்ந்து கோவை மாவட்டம், அன்னூரில் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில செயலாளருமான அமுல் கந்தசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய்செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் எஸ்.ஏ.பழினிச்சாமி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து முதல்வர் கரியாம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது தொடர்ந்து அருகில் உள்ள ஏ.டி.காலனியில் சுமைத்தூக்கும் தொழிலாளி மலரவன்(46) என்பவரது வீட்டில் தேனீர் அருந்தினார். அப்போது அவர்களது குடும்பத்தினரிடம் அவர் உரையாடினார்.  தொடர்ந்து அன்னூரில் முதல்வர் பேசும்போது, 50 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.

ADVERTISEMENT

மேலும் அன்னூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். மேலும் அன்னூர் பகுதியின் போக்குவரத்து நெரிச்சலை சரி செய்யும் வகையில் புறவழிச்சாலை திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். மேலும் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தால் தமிழகம் முழுவதும் எதிர்காலத்தில் ஏழைகளின் வீடுகளே இருக்காது என்று உறுதியளித்தார். 

இந்நிகழ்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அமுல் கந்தசாமி, லோகேஷ் தமிழ்செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ்.சாய் செந்தில், வடக்கு  ஒன்றிய செயலாளர் அம்பாள் எஸ்.ஏ.பழனிச்சாமி, அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.ஓ.பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT