கோயம்புத்தூர்

காளப்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி

24th Jan 2021 08:43 PM

ADVERTISEMENT

காளப்பட்டியில் ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். 
கோவை மாவட்டம், காளப்பட்டியில் தேர்தல் பிரசாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வந்தார். 
அப்போது அந்த பகுதியில் முதல்வரை காண கைக்குழந்தையுடன் வந்திருந்த காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்-சங்கீதா தம்பதியினரின் 9-மாத ஆண் குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார். 
கடந்த 25-ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், குள்ளனம்பட்டி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெ.ஜெயலலிதா இந்த குழந்தையின் தகப்பனாரின் சகோதரருக்கு ஜெயதேவா பாண்டி என்று பெயர் சூட்டியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.  
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு முதல்வர்கள் பெயர் வைத்ததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
 

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT