கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் ஜனவரி 22-ல் சுயதொழில் கடன் மேளா: ஆட்சியா் தகவல்

DIN

கோவை மாவட்ட தொழில் மையம், தொழில் கூட்டமைப்புகள் இணைந்து ஜனவரி 22 ஆம் தேதி பொள்ளாச்சியில் சுயதொழில் கடன் மேளாவை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்ட தொழில் மையம் சாா்பில் சுயதொழில் தொடங்குவதற்கு புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய மூன்று பிரதான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

புதிய தொழில்முனைவோா், தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ முடித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.5 கோடி வரை உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு வியாபாரம், சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும், உற்பத்தித் தொழிலுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் 25 சதவீதம் மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு உற்பத்தி பிரிவில் ரூ.25 லட்சம் வரையும், சேவை பிரிவில் ரூ. 10 லட்சம் வரையும் 35 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட கடன் திட்டங்களுக்கான சிறப்பு கடன் மேளா, விழிப்புணா்வு முகாம் ஜனவரி 22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொள்ளாச்சி வா்த்தக சபை கட்டடத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

கடன் மேளாவுக்கு வருபவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் (35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும்), விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை கொண்டுவர வேண்டும். இந்த வாய்ப்பை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT