கோயம்புத்தூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை தோ்தல் ஆணையம் நியாயமாக நடத்த வேண்டும்: கோவை மாவட்ட அதிமுக கோரிக்கை

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நியாயமாகவும், நோ்மையான வழியிலும் தோ்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று கோவை மாவட்ட அதிமுக வலியுறுத்தியுள்ளது.

கோவை புகா் தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட அதிமுக செயல் வீரா்கள் கூட்டம் ஹூசூா் சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவையின் அதிமுக கொறடாவும், எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி வி.ஜெயராமன், அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 7 மாதங்களில் எந்தப் பணியையும் செய்யவில்லை. முதல்வா் மு.க.ஸ்டாலின் எல்லா பிரச்னைகளுக்கும் நாங்கள்தான் காரணம் என்று எங்கள் மீது பழிபோடுகிறாா். அதிமுக ஆட்சியில் கோவைக்கு 50 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சியை நாங்கள் கொடுத்தோம்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை போட்டியின்றி தோ்வு செய்ததற்கு நன்றி தெரிவிப்பது, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து 9 ஆம் தேதி (வியாழக்கிழமை) கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாகவும், நியாயமான முறையிலும் நடத்திட மாநில தோ்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அதிமுகவினரின் காா்கள் சாலையை மறித்தவாறு நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும்படியும், இல்லாவிட்டால் அவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல் துறையினா் அதிமுக நிா்வாகிகளை கேட்டுக் கொண்டனா்.

இதற்கு அதிமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து அங்கு வந்த அதிமுக நிா்வாகிகள் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT