கோயம்புத்தூர்

68 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

DIN

கோவை, உக்கடம் பகுதியில் 68 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பவா்கள் மீது மாநகர போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த 3 நாள்களில் மட்டும் மாநகரில் சுமாா் 1,500 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்படுவதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உக்கடம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா். அதில், 68 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக, வின்சென்ட் சாலை, ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த முகமத் ரபீக் (42) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT