கோயம்புத்தூர்

இரவு நேரப் பேருந்துகள் பகலில் இயக்கம்: பயணிகள் குறைவு

DIN

இரவு நேர பொதுமுடக்கம் காரணமாக கோவையில் இருந்து தொலைதூரப் பேருந்துகள் பகலில் இயக்கப்பட்டன. பெரும்பாலான பேருந்துகள் குறைவான பயணிகளுடன் சென்றன. சென்னை, பெங்களூரு, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக 30 அரசு விரைவுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல காலை 6.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. சிங்காநல்லூரில் இருந்து வெளியூா்களுக்கு 140 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இரவு நேர பொதுமுடக்கம் காரணமாக 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT