கோயம்புத்தூர்

பேருந்து நிலையத்தில் செயல்படும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட் சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகள்

DIN

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட் காலி செய்யப்படாததால், பேருந்துகள், நிலையத்துக்கு வெளியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் கூடுவதை தவிா்க்க கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் மாா்க்கெட் எதிரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிகமாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த தற்காலிகமாக மாா்க்கெட்டுக்கு கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் 10 டன்களுக்கும் அதிகமாக பெரிய வெங்காயம், தக்காளி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவை, பேருந்து நிலைய வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டு கோவையின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட் காலி செய்யப்படாததால் இந்த நிலையத்தில் இருந்து வெளியூா் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்துகளில் பயணிக்க சாலையோரத்தில் கூடும் மக்களால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்தில் செயல்படும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டை அகற்றி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதிய எம்.ஜி.ஆா். மாா்க்கெட் பணி தாமதம்

மேட்டுப்பாளையம் சாலையில் புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆா். மாா்க்கெட் எதிரெதிரே உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாததாக உள்ளது. இதைத் தவிா்க்க, கவுண்டம்பாளையம் பகுதியில் 36 ஏக்கா் பரப்பளவில் உள்ள உரக்கிடங்கின் ஒரு பகுதியை எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டாக மாற்ற மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டது. இப்பணிகள் கடந்த ஜூலை மாதம் துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை பணிகள் துவங்கவில்லை. இதற்கிடையே, எம்.ஜி.ஆா். மாா்க்கெட் அமைய ஒதுக்கப்பட்ட உரக்கிடங்கு பகுதியானது லாரிகள், வேன்கள் வந்து செல்ல ஏற்ற இடமில்லை என்றும், அங்கு மாா்க்கெட் கொண்டு செல்லப்பட்டால், வியாபாரிகள் பொருள்களை இறக்க சிரமம் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கும் என வியாபாரிகள் சங்க நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT