கோயம்புத்தூர்

பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

வால்பாறை: வால்பாறை காவல் துறை சாா்பில் மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வால்பாறை பகுதியில் கல்லாறு, கீழ்பூணாச்சி, சங்கரன்குடி, பாலக்கிணறு, பரமன்கடவு உள்பட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு இலக்கு படை காவல் துறை கண்காணிப்பாளா் மூா்த்தி உத்தரவின்பேரில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மழைக் காலத்தில் பயன்பெறும் வகையில் போா்வை, ஆடைகள் உள்பட நிவாரணப் பொருள்களை உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் பழங்குடியின மக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT