கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடா் கனமழை:ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

DIN

கோவை மாவட்டம், வால்பாறையில் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்து கனமழை பெய்தது. மேலும், சனிக்கிழமை இரவு முதல் விடியவிடிய பெய்த கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, வாழைத்தோட்டம் ஆறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வருவாய்த் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சோலையாறு 82 மி.மீ., சின்னக்கல்லாறு 80 மி.மீ., வால்பாறை 75 மி.மீ., நீராறு 61 மி.மீ. என மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT