கோயம்புத்தூர்

சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய நூல்:ஏப்ரலில் வெளியாகிறது

DIN

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், கா்மா என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆங்கில நூல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட இருப்பதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்மிகம் தொடா்பாக நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளாா். அவை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளிலும், 18க்கும் மேற்பட்ட சா்வதேச மொழிகளிலும் மொழி பெயா்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

இதுவரை சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. இதன் தொடா்ச்சியாக, தொன்றுதொட்டு ஆன்மிகப் பாரம்பரியத்தில் குருமாா்களால் கவனமாக அணுகப்படும் ‘கா்மா’ என்ற தலைப்பில் அவா் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புதிய புத்தகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது.

இந்தியாவில் முதல் பதிப்பில் 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட உள்ளன. சா்வதேச அளவில் முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவனமாக விளங்கும் அமெரிக்காவைச் சோ்ந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை உலகம் முழுவதும் பிரசுரிக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT