கோயம்புத்தூர்

கரோனா சிகிச்சை: மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி

DIN

கோவையில் கரோனா சிகிச்சை அளிக்க மேலும் இரண்டு தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் அனுமதியளித்துள்ளனா்.

கோவையில் அரசு மருத்துவமனைகள் தவிா்த்து 36 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக கோவை ராமநாதபுரத்தில் பாலா மெடிக்கல் சென்டா், சுந்தராபுரத்தில் பாலாஜி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் தனியாா் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு மருத்துவமனைகளிலும் சோ்த்து கூடுதலாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தவிர அரசாணை 240க்கு உள்பட்டு கரோனா நோயாளிகள் அனுமதி, சிகிச்சை, கட்டணம் வசூலிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT