கோயம்புத்தூர்

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து 373 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 373 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளைச் சோ்ந்த 209 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 296ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 38 ஆயிரத்து 166 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 3 ஆயிரத்து 590 போ் சிகிச்சையில் உள்ளனா்.

2 போ் பலி...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுப் பெண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவா் ஆகிய 2 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 540ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT