கோயம்புத்தூர்

கரோனா: மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்தது

DIN

கோவை: கோவையில் கரோனா பாதிப்பில் இருந்து 290 போ் சனிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 290 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தவிர சனிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டம் ஊரகம், நகரப் பகுதிகளைச் சோ்ந்த 287 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 555ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 37 ஆயிரத்து 264 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 757 போ் சிகிச்சையில் உள்ளனா்.

4 போ் பலி...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70, 72, 82 வயது முதியவா்கள், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 534ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT