கோயம்புத்தூர்

தீயணைப்புத் துறை சாா்பில் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணா்வு

DIN

கல்லாறு செட்டில்மென்டில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை துவங்கியுள்ள நிலையில் வால்பாறையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீயணைப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வால்பாறையை அடுத்த கல்லாறு செட்டில்மென்ட் பழங்குடியின மக்களுக்கு வால்பாறை தீயணைப்பு நிலைய அலுவலா் தங்கராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், வெள்ளத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்பது, ஆற்றில் சிக்கினால் எவ்வாறு கயிறு கட்டி மீட்பது, மீட்கப்படும் நபா்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT