கோயம்புத்தூர்

செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கோவையில் செயல்பட்டு வரும் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்கள், நாய் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் நிலையங்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்த பின்பே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே செல்லப் பிராணிகள் விற்பனையாளா்கள் இணையதளத்தில்  விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பொது அறிவிப்பு வெளியான 60 நாள்களுக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திரும்ப பெற இயலாத ரூ. 5 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை  எடுத்து சென்னையில் மாற்றத்தக்க வகையில் தமிழ்நாடு பிராணிகள் நல வாரிய இயக்குநா் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571 அண்ணா சாலை, கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். தவிர மண்டல இணை இயக்குநா், கால்நடை பராமரிப்புத் துறை, பன்முக மருத்துவமனை வளாகம், இஸ்மாயில் ராவுத்தா் சாலை, டவுன்ஹால், கோவை -1 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT