கோயம்புத்தூர்

'அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் வேளாண் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்க்கின்றனர்'

23rd Nov 2020 02:45 PM

ADVERTISEMENT

அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் வேளாண் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பதாக வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் புதிதாக அமையவுள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலக கட்டடத்துக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் வெளியுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் முருகன் மற்றும் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவுக்கு சொந்த அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் வாணியம்பாடி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில்  கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கட்டடங்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்கப்பட உள்ளது. தற்போது கோவையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கட்டடம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவால் திறந்து வைக்கப்படவுள்ளது. வேல் யாத்திரை நிகழ்வுகளில் எப்போதும் கைது செய்யப்படுவது போலவே நேற்றும் என்னை கைது செய்து விடுவித்தனர். இன்று வேலை யாத்திரை பழனியில் தொடங்குகிறது. வரும் 5ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவடைகிறது என்றார்.

 

ADVERTISEMENT

பின்னர் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேசுகையில், மத்திய அரசின் வேளாண் பாதுகாப்பு சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல, இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து எங்கு வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும். இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினரின் அரசியல் லாபத்திற்காக போராடி வருகின்றனர். கேரளத்தில் இயற்றப்பட்டுள்ள சைபர் லா கருத்து சுதந்திரத்துக்கு எதிரான கொடூர சட்டம் ஆகும். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அரசின் தலையீடு ஏதுமில்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

Tags : coimbatore
ADVERTISEMENT
ADVERTISEMENT