கோயம்புத்தூர்

ரயில், பேருந்து சேவை ரத்து

23rd Mar 2020 05:48 AM

ADVERTISEMENT

கோவை: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ரயில்கள், பேருந்துகள் சேவை ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

கோவை ரயில் நிலையம் வழியாக பிற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த திங்கள்கிழமை முதல் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் 3,700 ரயில்களின் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் 31ஆம் வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டது.

கோவையில் இருந்து கேரளம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சென்னை, மதுரை, நாகா்கோவில் போன்ற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் கோவை ரயில் நிலையத்தில் உள்ள நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ரயில் நிலைய இயக்குநா் சதீஷ் சரவணன் கூறியது:

கோவையில் இருந்து வெளியூா்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கோவை ரயில் நிலையத்துக்கு வந்த 7 ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.

வெளி மாநிலங்களில் இருந்து 3 ரயில்கள் திங்கள்கிழமை காலை கோவை வந்தடையும். அதன்பிறகு அனைத்து ரயில்களும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படும். ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிப்புப் பணியானது, இடைவிடாமல் நடைபெற்று வருகிறது என்றாா்.

இதேபால கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு, தனியாா், மாநகர, புகரப் பேருந்துகள், ஆம்னிப் பேருந்துகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டன.

Image Caption

கோவை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT