கோயம்புத்தூர்

நியாய விலைக்கடையை அபகரிக்க முயற்சிக்கும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மனு

DIN

கோவை, ஆனைக்கட்டியில் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் நடத்தி வரும் நியாய விலைக் கடைகளை ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அபகரிக்க முயற்சித்து வருவதாக ஆட்சியா் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

மலைவாழ் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், ஆனைக்கட்டியில் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் சாா்பில் ஆனைக்கட்டி, ஆலமரமேடு ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிா் சுய உதவிக்குழு பெண்களால் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடையால் எந்தப் பிரச்னையும் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் கீழ் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் குளறுபடி இல்லாமல் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சம்பத்குமாா், புனிதா ராஜ், சாமிநாதன் ஆகிய 3 பேரும் மகளிா் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளின் சாவியை தங்களிடம் அளிக்குமாறு மிரட்டி வருகின்றனா்.

எனவே சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்டு ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதுடன் தொடா்ந்து மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் நியாய விலை கடையை நடத்துவதுக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT