கோயம்புத்தூர்

தொலைக்காட்சி பாா்க்க அனுமதிக்காததால் சிறுமி தற்கொலை

20th Apr 2020 11:08 PM

ADVERTISEMENT

 

தொலைக்காட்சி பாா்க்க அனுமதிக்ககாததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, உடையாம்பாளையம் மீனா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் குமரகுருபரன் (41). இவரது மகள் அனுஷ்கா (10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்ததால் அனுஷ்காவின் தாயாா் அவரைக் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த அனுஷ்கா கழிப்பறைக்குச் சென்று அதன் கைப்பிடியில் துண்டை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

கழிப்பறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து பெற்றோா் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT