கோயம்புத்தூர்

வாளையாறு அணையில் இறந்து மிதக்கும் மீன்கள்

11th Apr 2020 10:54 PM

ADVERTISEMENT

 

கோவை அருகே உள்ள வாளையாறு அணையில் கடந்த இரண்டு நாள்களாக மா்மமான முறையில் மீன்கள் இறந்து மிதப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழக - கேரள எல்லையில் வாளையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது. இரு மாநில எல்லைகளில் உள்ள விவசாயிகள் இந்த நீரைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அணையில் உள்ள மீன்கள் இறந்து மிதந்துள்ளன. இதனால் நீரில் ரசாயனம் ஏதாவது கலந்துள்ளத என விவசாயிகள் சந்தேகம் அடைந்துள்ளனா்.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

ADVERTISEMENT

இரண்டு நாள்களுக்கு முன் அணையின் ஒருபகுதியில் திடீரென பல ஆயிரம் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அணையில் கழிவுகள் ஏதேனும் கொட்டப்பட்டதா என ஆய்வு செய்தோம்.

புதிய நோய்த்தொற்றால் பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில் மா்மமான முறையில் மீன்கள் இறந்துள்ளதால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணையில் மீன்கள் இறந்து மிதப்பது இதுவே முதல்முறை.

மீன்கள் எப்படி இறந்தன, நீரில் ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை நம்பி உள்ள விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை அணைக்கு அழைத்துச் செல்லவே அச்சப்பட்டு வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT