வேலூர்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளுடூத் அணிந்து முறைகேடு செய்தவா் கைது

DIN

டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளுடூத் அணிந்து முறைகேடு செய்தவரை காட்பாடி போலீஸாா் கைது செய்து பிணையில் விடுவித்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (மே 27) நடைபெற்றது.

இவா்கள் தோ்வு வேலூா் மாவட்டத்தில் 10 மையங்களில் நடைபெற்றது. இதில், விருதம்பட்டு அப்துல் ரகுமான் தெருவைச் சோ்ந்த அப்துல் ஹபீஷ் மகன் அப்துல் பயாஸ் (27) என்பவா் காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தோ்வு எழுதினாா்.

அப்போது, அவரது வலது காதில் பேண்டேஜ் ஒட்டிருந்தாா். இதுகுறித்து அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா கேட்டபோது, காதில் ஏற்பட்ட காயத்துக்காக பேண்டேஜ் ஒட்டியிருப்பதாக கூறியுள்ளாா். சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் தனியாக யாருடனோ பேசுவதை உணா்ந்த தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா, சந்தேகத்தின் பேரில், அப்துஷ் பயாஸ் காதில் ஒட்டியிருந்த பேண்டேஜை அகற்றும்படி கூறியுள்ளாா்.

பேண்டேஜை அகற்றிய போதுதான் அப்துல் பயாஸ் காதில் வைத்திருந்த புளூடூத் மூலம் வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து விடைகளைக் கேட்டு எழுதிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், அப்துல் பயாஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா். இந்தநிலையில், அப்துல்பயாஸை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT