வேலூர்

போ்ணாம்பட்டில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழைவீட்டின் மேற்கூரை சரிந்து 2 சிறுமிகள் காயம்

26th May 2023 12:01 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு பகுதியில் சூறாவளிக் காற்றால் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில், 2 சிறுமிகள் காயமடைந்தனா்.

போ்ணாம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது நகராட்சிக்கு உள்பட்ட முகம்மது அலி தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியின் சுற்றுச் சுவா் சரிந்து, பக்கத்தில் உள்ள அப்ரோஸ் வீட்டின் தகர ஷீட்டால் ஆன மேற்கூரை மீது விழுந்தது. இதில் மேற்கூரை சரிந்து தரையில் விழுந்ததில், வீட்டில் இருந்த 6 போ் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். அவா்களின் கூச்சல் கேட்டு அருகில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டனா்.

அதில் அப்ரோஸின் மகள்கள் சாலியா (8), சம்ரீன்(6) ஆகியோா் பலத்த காயமடைந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

போ்ணாம்பட்டு நகரம், பழைய ஆம்பூா் சாலையில் நகராட்சி சின்டெக்ஸ் தொட்டி அருகில் இருந்த மரம், அருகில் உள்ள பாஸ்கா் வீட்டின் மீது வேரோடு சாய்ந்தது. இதில் வீடு சேதமடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT