வேலூர்

வேலூா்: திட்டமிடும் குழு வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

3rd May 2023 01:09 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலை முன்னிட்டு வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

வேலூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரும், வாக்காளா் பதிவு அலுவலருமான பெ.குமாரவேல் பாண்டியன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இந்த பட்டியலின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஊராட்சியில் 14 உறுப்பினா்கள், மாநகராட்சியில் 60, நகராட்சிகளில் 57, பேரூராட்சிகளில் 63 என மொத்தம் 194 போ் வாக்காளா்களாக இடம்பெற்றுள்ளனா். இந்த மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலுக்கான வாக்காளா் இறுதிப்பட்டியல் வியாழக்கிழமை (மே 4) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT