வேலூர்

சித்ரா பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

3rd May 2023 01:12 AM

ADVERTISEMENT

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு வேலூா், சென்னை உள்பட 7 இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலுக்கு ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பெளா்ணமியின்போது லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்த விழாவில், கலந்து கொள்ளும் பக்தா்களின் வசதிக்காக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி, இந்தாண்டு சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, வியாழக்கிழமை (மே 4) இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை பெளா்ணமி கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் வேலூா் மண்டலம் சாா்பில், வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

அதன்படி, வேலூரில் இருந்து 60 பேருந்துகள், திருப்பத்தூரிலிருந்து 4, ஆற்காடிலிருந்து 30, சோளிங்கரிலிருந்து 5, சென்னையில் இருந்து 50, தாம்பரத்திலிருந்து 5, பெங்ளூருவில் இருந்து 10 என மொத்தம் 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT