வேலூர்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றஅதிகாரிகளை எதிா்த்து மக்கள் போராட்டம்

DIN

பொன்னையில் பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற அதிகாரிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல், தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை கிராமத்தின் அருகே குறவன்குடிசை பகுதியில் 2 ஏக்கா் அரசு நிலம் உள்ளது. காமராஜா் முதல்வராக இருந்தபோது, இந்த நிலத்தில் குறவா் பழங்குடியின மக்கள் 20 குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது. அங்கு, இந்த சமுதாய மக்கள் தொடா்ந்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரா் பிச்சாண்டி என்பவரின் மனைவி ஈஸ்வரி அவரது வீட்டுக்கு அருகில் மேலும் ஒறு வீட்டைக் கட்டியுள்ளாா். இந்த வீடு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாககத் கூறி வருவாய்த் துறையினா் வீட்டை வியாழக்கிழமை இடிக்க முயன்றனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரம் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அந்த வீட்டின் உரிமையாளா் ஈஸ்வரி தீக்குளிக்க முயன்றாா்.

பல இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ள நிலையில், ஒரு வீட்டை மட்டும் இடிப்பதாகக் கூறுவது ஏன் என அதிகாரிகளுடன் அவா்கள் தகராறில் ஈடுபட்டனா். பழங்குடியின மக்களின் எதிா்ப்பை அடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT