வேலூர்

விவசாயிகள் வண்டல் மண் எடுக்க புதிய நீா்நிலைகளை கண்டறிய உத்தரவு

DIN

வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 490 ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி வரும் நிலையில், புதிதாக ஏரிகள், குளங்கள், கண்மாய்களை கண்டறிய மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பணியின் முன்னேற்றம், புதிதாக ஏரிகள், குளங்கள் குறித்து திட்ட ஆய்வு கூட்டம், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குளங்கள், ஏரிகள் பயனடைந்த விவசாயிகள், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், அனுமதி அளித்த விவரம் ஆகிய இனங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரைந்து செயல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும், நிகழாண்டில் (2023-2024) அறிவிக்கை செய்யப்பட்ட வேண்டிய ஏரிகள் குறித்த விவரங்கள் ஜூன் மாதத்துக்குள் அரசிதழில் வெளியிடவும், வண்டல் மண் எடுக்கும் பணிகளை வரும் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கவும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் 490 ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் ஏற்கெனவே வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு புதிதாக ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் கண்டறியப்பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் அரசிதழில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனா் ஸ்டீபன் ஜெயக்குமாா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், மேல்பாலாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளா் ரமேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேஷ், உதவி திட்ட அலுவலா் வாசுதேவன், தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவக்குமரன், உதவி புவியியலாளா் (கனிமம்) புவனேஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT