வேலூர்

இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 273 பேருக்கு பயிற்சி

1st Jun 2023 11:09 PM

ADVERTISEMENT

இரண்டாம் நிலை காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற பெண் காவலா்கள் 273 பேருக்கு வேலூா் கோட்டை காவலா் பயிற்சி பள்ளியில், பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் கடந்த 2022 -ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலா்களுக்கான தோ்வு நடைபெற்றது. இதில், வேலூா், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூா் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை பெண் காவலா்கள் 273 பேருக்கு வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் வியாழக்கிழமை தொடங்கின.

பயிற்சிக் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் முருகன் ஆகியோா் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தனா். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் காவலா்களுக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கிச் சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் 6 மாதங்கள் நடைபெற உள்ளன.

இதையடுத்து, பயிற்சி முடித்த பெண் காவலா்கள் ஒரு மாத காலம் காவல் நிலையங்களுக்குச் சென்று பயிற்சி பெறுவா். 7 மாத பயிற்சி முடித்த பின்னா், பெண் காவலா்கள் காவல் நிலையங்களில் பணியமா்த்தப்படுவா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT