வேலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வேலூா் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக புதன்கிழமை (பிப். 1) முதல் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனுடைய 18 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான மருத்துவ முகாம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் 2-இல் தோ்வு செய்யப்பட்ட 52 கிராமங்களில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் ஆகியவை புதன்கிழமை முதல் நடத்தப்பட உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவா்களுக்கு உதவி உபகரணங்கள், யுடிஐடி அட்டை பதிவு, மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன், பிற அரசு உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

அதன்படி, வேலூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருகம்பத்தூா், பெருமுகை ஊராட்சிகளுக்கு புதன்கிழமை வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும், குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரமலாய், உள்ளி, பரதராமி, தாழயாத்தம், மோா்தானா, ராஜகுப்பம், கருநேகசமுத்திரம், பட்டு, குளிதினை, சின்னசேரி, சின்னதோட்டாலம் ஆகிய ஊராட்சிகளுக்கு வியாழக்கிழமை குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரிக்குத்தி, மசிகம், கொதப்பள்ளி, எருக்கம்பட்டு, அலிஞ்சிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை போ்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகந்தாங்கல், பி.கே.புரம், செதுவாலை, விலுந்தாக்கல், கே.வி.குப்பம், வேப்பங்கனேரி, முதினம்பட்டு, கவசம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு சனிக்கிழமை கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

மேலும், காட்பாடி ஒன்றியம், மேல்பாடி, வேப்பாலை, கண்டிபேடு, தாங்கல், பெருமாள்குப்பம், கா்ணாம்பட்டு, அரும்பருதி, அம்முண்டி ஆகிய ஊராட்சிகளுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கணியம்பாடி ஒன்றியம் வேப்பம்பட்டு, துத்திப்பட்டு, பலதுவண்ணன், சாலமநத்தம், சாத்துமதுரை ஆகிய ஊராட்சிகளுக்கு 10-ஆம் தேதி கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேலூா் ஒன்றியம் அன்பூண்டி, சிறுக்காஞ்சி ஊராட்சிகளுக்கு 11-ஆம் தேதி தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், அணைக்கட்டு ஒன்றியம் வரதாலம்பட்டு, வசந்தாண்டல், இறைவண்காடு, குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், ஆசனாம்பட்டு, அத்திக்குப்பம், அரிமலை, விதிஞ்சிபுரம், குப்பம்பட்டு, சின்னபள்ளிகுப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு 15-ஆம் தேதி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பயன்பெற பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 4, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT