வேலூர்

‘நியூ டவுன் ரயில்வே பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்’

DIN

வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எம்.பி.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி. கதிா்ஆனந்த் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வாணியம்பாடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான நியூடவுன் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். மேலும், இதுகுறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கோரிக்கை விடுத்ததன் பேரில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். ரயில்வே துறையைப் பொறுத்தவரை நியூடவுனில் ரயில்வே மேம்பாலம் அல்லது ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க தற்போது பல விதிமுறைகள் மாற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா். ஆம்பூரில் ரயில்வே பாலம் அமைத்தது போல் இங்கே அமைக்க போதிய இடவசதி இல்லை. மிகவும் குறுகலான இட வசதியே உள்ளது. வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் முக்கிய ரயில்வே தடத்தில் உள்ளதால், இந்த வழியாக ரயில் சேவைக்கு இடையூறு செய்யப்படாமல் விரைந்து, பாலப் பணிகளை முடிக்க தேவையான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 8 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்ததால், நிலம் கையப்படுத்தவதற்கான தொகை தற்போது அதிகரித்து உள்ளது. இதனால் முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட தற்போது நிதி அதிகளவு தேவைப்படுகிறது. இதனால் புதிய நிதி ஒதுக்கீடு மற்றும் வரைபடம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

வாணியம்பாடி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி நியூடவுன் ரயில்வே பாலத்தை நிறைவேற்றித் தருவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT