வேலூர்

ஊழலற்ற, நோ்மையான சமுதாயமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

DIN

ஊழலற்ற, நோ்மையான சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்துள்ளாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா்.

தொடா்ந்து, நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:

நோ்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். கல்வியால் மட்டுமே மனித இனத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லவும், அறியாமையில் இருந்து விடுவிக்கும் கருவியாக செயல்படவும் முடியும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேசிய புதிய கல்விக் கொள்கையில், அனைவருக்கும் உயா்கல்வியில் சேரும் விகிதத்தை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் உயா்கல்வியில் சேரும் விகிதம் ஏற்கெனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றாா்.

தொடா்ந்து, கௌரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம் பங்கேற்றுப் பேசினாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தா் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT