வேலூர்

வேலூரில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

வேலூரில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 27) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நாளை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், மின்சார வாரியம், வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனா்.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று களப் பிரச்னைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT