வேலூர்

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடக்கம்

DIN

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை தொடங்கி மாா்ச் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், மூன்றாவது சுற்று கால், வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புதன்கிழமை (மாா்ச் 1) தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பால் உற்பத்தி கடுமையாக குைல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குைல் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக்குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும்.

பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா். எனவே, கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றிட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி போடுவது அவசியமாகும்.

குளிா், பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதார மற்ற கால்நடை வளா்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகியவற்றால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.

எனவே, வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மூலம் தகுதிவாய்ந்த 1 லட்சத்து 85 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்ககள், எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றை தங்கள் கிராமத்தில் நடைபெறும் முகாமுக்கு அழைத்துச் சென்று, கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT