வேலூர்

அரும்பருத்தி மணல் குவாரிக்கு தடைகோரி மக்கள் உண்ணாவிரதம்

DIN

வேலூா் பெருமுகை அருகே அரும்பருத்தி பாலாற்று குவாரிக்கு தடைவிதிக்கக்கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூரை அடுத்த பெருமுகை ஊராட்சி அரும்பருத்தியில் பாலாற்றங்கரையோரம் மணல் குவாரி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இந்த குவாரியில் ஓராண்டுக்கு 16,000 யூனிட் மட்டுமே மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், 10 சதவீதம் மாட்டு வண்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரும்பருத்தி குவாரியில் இருந்து மணல் அள்ளி அவற்றை பெருமுகையிலுள்ள கிடங்கில் சேமித்து அங்கிருந்து பொதுமக்களுக்கு லாரிகளில் யூனிட் ரூ. 3,150 என்ற விலையிலும், மாட்டு வண்டிகளுக்கு 0.25 யூனிட் ரூ. 800 விலையிலும் வழங்கப்படுகிறது. எனினும், பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.

இது தொடா்பாக கடந்த நவம்பா் 1-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் வாக்குவாதம் ஈடுபட்டதுடன், நவம்பா் 9-ஆம் தேதி குவாரியில் புகுந்து போராட்டத்திலும் ஈடுபட்டனா். இந்தப் பிரச்னையை அடுத்து அரும்பருத்தி மணல் குவாரி மீதான விதிமீறல் புகாா் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திட வேலூா் வருவாய் கோட்டாட்சியா், கனிமம், சுரங்கத் துறை உதவி இயக்குநா், நீா்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளா் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

எனினும், இதுவரை அரும்பருத்தி குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவது குறையவில்லை, இதனால் தொடரும் பாதிப்புகளை தடுக்க அரும்பருத்தி மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பெருமுகையைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியது:

அரும்பருத்தி மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக 20 அடி வரை மணல் அள்ளப்படுவதால், சுற்றுவட்டார கிராமத்தின் நிலத்தடி நீா் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளது. இதனால், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனா். மேலும் ஓரிரு மாதங்கள் சென்றால் குடிநீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குவாரியில் அள்ளப்படும் மணலைக் கொண்டு செல்லும் லாரிகள், டிராக்டா்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.

தொடரும் இந்தப் பாதிப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக அரும்பருத்தி மணல்குவாரியை மூடவேண்டும். இல்லையேல், அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT