வேலூர்

மனுநீதி நாளில் 259 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

குடியாத்தம் ஒன்றியம், விழுதோன்பாளையம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 259 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, தையல் இயந்திரங்கள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முன்னதாக முகாம் அரங்கில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா். அங்குள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களிடம் கலந்துரையாடினா். மாணவா்களுக்கு போதிக்கப்படும் கல்வி குறித்துக் கேட்டறிந்தாா்.

கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், ஆா்.திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் என்.தேவி, ஊராட்சித் தலைவா் டி.கனகரத்தினம், வருவாய் ஆய்வாளா் பலராமன் பாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் வெங்கடாசலபதி, ஜீவரத்தினம், சசிகுமாா், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT