வேலூர்

புதுமைப் பெண் திட்டம்: வேலூரில் 2-ஆவது கட்டமாக 1,961 மாணவிகள் தோ்வு

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக 1,961 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அரசின் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2,046 மாணவிகள் சோ்க்கப்பட்டு மாதம் ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து தற்போது வரை 3,026 மாணவிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2-ஆவது கட்டமாக உதவித் தொகை வழங்கும் நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து காணொலிக் காட்சி மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கும் 2-ஆவது கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்குவதை அவா் தொடக்கி வைத்தாா்.

காட்பாடி அக்ஸீலியம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக 56 கல்லூரிகளில் பயிலும் 1,961 மாணவிகள் சோ்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன், அவா்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கும் பணியைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அக்ஸீலியம் கல்லூரியில் பயிலும் 800 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் எஸ்.காவேரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT