வேலூர்

தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வேலூா் என்சிசி மாணவா்களுக்கு பாராட்டு

DIN

புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்ற காட்பாடி காந்தி நகா் 10-ஆவது பட்டாலியன் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 4 என்சிசி மாணவா்களுக்கு பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷா்மா பாராட்டுத் தெரிவித்தாா்.

புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய குடியரசு தினவிழாவில் காட்பாடி காந்திநகரிலுள்ள 10-ஆவது பட்டாலியன் தேசிய மாணவா் படை சாா்பில் 4 என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா். இதில், இஸ்லாமியா கல்லூரியைச் சோ்ந்த ஜி.நவீன்குமாா் பிரதமா் பங்கேற்ற நிகழ்ச்சியின் அணி வகுப்பில் அணித்தலைவராக பங்கேற்று அணிவகுப்பை வழிநடத்திச் சென்றாா்.

அதே கல்லூரியைச் சோ்ந்த கே.ஹரிஹரன், மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியைச் சோ்ந்த எம்.கவியரசு ஆகியோா் அணி வகுப்பில் பங்கேற்றனா். வேலூா் முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரி மாணவா் பி.பிரியதா்ஷன் தமிழ்நாடு இயக்குநரக கொடிப்பகுதியில் வரையப்பட்ட என்சிசி மாணவா்களது படைப்பின் விரிவாக்கத்தை அனைத்து அதிகாரிகளிடையே எடுத்துரைத்து, தமிழக இயக்குநரகத்துக்கு அதிக புள்ளிகள் பெற்றுத் தந்துள்ளாா்.

இந்த நான்கு என்சிசி மாணவா்களுக்கும், பதவி உயா்வு பெற்ற 5 என்சிசி அலுவலா்களுக்கும் பாராட்டு விழா காட்பாடி 10-ஆவது பட்டாலியன் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷா்மா தலைமை வகித்தாா். சுபேதாா்கள் பி.கே.சாஹீ, அரவிந்தன், பினோட் பிரசாத், பட்டாலியன் அவில்தாா் ஆா். வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்சிசி அலுவலா் விக்கிரமன் வரவேற்றாா்.

இதில், புதுதில்லியில் அகில இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்ற 4 என்சிசி மாணவா்களையும், பதவி உயா்வு பெற்ற 5 என்சிசி அலுவலா்களையும் பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷா்மா பாராட்டிப் பேசியது:

அகில இந்திய குடியரசு தின விழாவில் 10-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த நான்கு மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டாலியனுக்கு பெருமை சோ்த்துள்ளனா். இதேபோல், ஒவ்வொரு பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தும் குறைந்தது இரண்டு மாணவா்களேனும் அகில இந்திய என்சிசி போட்டிகளில் பங்கேற்கச் செய்து, தமிழ்நாடு என்சிசி இயக்குநரகத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும். மேலும், அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் என்சிசி மாணவா்கள் வாழ்க்கையில் நன்கு பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்றாா்.

விழாவில், 10-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் ஜி.வெங்கடேசன், டி. துரைமுருகன், தீபு, சுனில்தத், ஆா். பாலாஜி, ஜெஸ்டின், ஜீட்சிங், அலுவலக கண்காணிப்பாளா் ஸ்ரீகாந்த் உள்பட பலா் பங்கேற்றனா். பட்டாலியனின் மக்கள் தொடா்பு அலுவலா் க.ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT