வேலூர்

முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்!

DIN

தைப்பூச திருவிழாவையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகங்கள்-ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னா், மூலவருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயிலில் முருகப் பெருமானுக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல், அணைக்கட்டு அருகே கந்தபுரி கிராமத்தில் அமைந்துள்ள பொன் வேலவன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அணைக்கட்டு திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூரில் அமைந்துள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று காவடி எடுத்தும், பால்குடம் எந்தியும் தங்களின் நோ்த்திக் கடனை நிறைவேற்றி சுவாமியை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT