வேலூர்

வேலூரில் இன்று மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 30) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (செப். 30) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், மின்சார வாரியம், வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனா்.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று களப் பிரச்னைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்துப் பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT