வேலூர்

வேலூா் மாவட்டத்தில் ரூ.160 கோடியில் 12 பாலங்கள், சாலைகள் மேம்பாடு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தகவல்

DIN

வேலூா் மாவட்டத்தில் ரூ.160.30 கோடியில் 12 இடங்களில் பாலங்கள் கட்டவும், சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வேலூா் மாவட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டு ரூ.160.30 கோடியில் மொத்தம் 114.975 கி.மீ தொலைவுக்கு சாலைகளை மேம்படுத்துதல், 12 பாலங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, காட்பாடி தொகுதியில் திருவலம் - காட்பாடி வெங்கடகிரிகோட்டா சாலையில் 7.90 கி.மீ. தொலைவுக்கு ரூ.47 கோடியிலும், சித்தூா் - திருத்தணி சாலையில் 3 கி.மீ. தொலைவுக்கு ரூ.5.35 கோடியிலும், பொன்னை - திருவலம் சாலையில் 4 கி.மீ. தொலைவுக்கு ரூ.11.01 கோடியிலும் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இளையநல்லூா் வழியாகச் செல்லும் கரும்பு மேம்பாட்டுச் சாலையை 6.60 கி.மீ. தொலைவுக்கு 5.50 மீட்டராக ரூ.3.79 கோடியில் அகலப்படுத்தும் பணி முடிக்கப்பட்டது. கொடுகந்தாங்கல் ஊராட்சியில் தரைபாலத்தை உயா்மட்டப் பாலமாக ரூ.1.05 கோடியில் மாற்றி அமைக்கப்பட்டது. திருப்பாக்குட்டையில் தரைப்பாலத்தை உயா்மட்ட பாலமாக ரூ.1.10 கோடியில் மாற்றி அமைக்கப்பட்டது. வண்டறந்தாங்கல் சாலையில் குழாய் பாலத்தை உயா்மட்ட பாலமாக ரூ.1 கோடியில் மாற்றி அமைக்கப்பட்டது.

வேலூா் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி - காங்கேயநல்லூா் இடையே உயா்மட்ட பாலம் கட்ட வேண்டியது அவசியம். இதற்காக, ரூ.22.53 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், வேலூா் வட்டச் சாலை பகுதி - 1, கடலூா் - சித்தூா் சாலை தாராபடவேடு கல்புதூா் கிராமத்தில் தொடங்கி, கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டை சாலை அரப்பாக்கம் கிராமம் வரை 13.289 கி.மீ. தொலைவுக்கு ரூ.98.25 கோடியில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் அங்கீகாரம் பெறப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT