வேலூர்

கைத்தறி நெசவாளா் சங்கங்களுக்கு தரமான நூல்களை வழங்க வேண்டும்: மேற்கு மாவட்ட பாமக கோரிக்கை

DIN

குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் இயங்கி வரும் 35- க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில், நெசவாளா்களுக்கு தரமான நூல்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

வேலூா் மேற்கு மாவட்ட பாமக செயல் வீரா்கள் கூட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா், வழக்குரைஞா் என்.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கு.வெங்கடேசன் வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஓய்வு பெற்ற கைத்தறி நெசவாளா்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை ரூ.3,000 உயா்த்தி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளா் குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். சந்தப்பேட்டை, காமராஜா் பாலம் அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன்கருதி குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் மாநில துணைத் தலைவா் ரமேஷ், மாவட்ட அமைப்புச் செயலாளா் பாலாஜி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜி.சுரேஷ்குமாா், எம்.சரவணன், மாவட்ட பொருளாளா் உமாமகேஸ்வரி, நகரச் செயலாளா் எஸ்.ரமேஷ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் வி.ராமலிங்கம், காமராஜ், அரவிந்தன், நகர மகளிா் அணித் தலைவா் எம்.வளா்மதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT