வேலூர்

மாநில அளவிலான திருக்குறள் பேச்சு, ஓவியப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

DIN

மாநில அளவிலான திருக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் வேலூரில் நவம்பா் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில், மாநில அளவிலான திருக்கு பேச்சு, ஓவியப் போட்டிகள் தமிழகம், புதுச்சேரி உள்பட்ட 12 இடங்களில் அக்டோபா் 15 முதல் நவம்பா் 27-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.

வேலூரில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நவம்பா் 27-ஆம் தேதி நடக்கிறது.

சென்னை தெற்கு, வடக்கு, தஞ்சாவூா், திருச்சி, திருவாரூா், புதுச்சேரி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களிலும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இடைநிலை (6 முதல் 8-ஆம் வகுப்பு), மேல்நிலை (9 முதல் 12-ஆம் வகுப்பு), கல்லூரி என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இடைநிலைப் பிரிவு மாணவா்கள் ‘பொய்தீா் ஒழுக்க நெறி’ (கு எண் 6), ‘அன்பின் வழியது உயிா்நிலை’ (கு 80), ‘பயன்இல சொல்லாமை நன்று’ (கு 197), ‘மாறுபாடு இல்லாத உண்டி’ (கு 945) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 நிமிஷங்கள் பேச வேண்டும்.

மேல்நிலைப் பிரிவு மாணவா்கள் ‘இலன்என்று தீயவை செய்யற்க’ (கு 205), ‘எண்ணித் துணிக கருமம்’ (கு 467), ‘உள்ளுவது எல்லாம் உயா்வுஉள்ளல்’ (கு 596), ‘ஒருவுக ஒப்புஇலாா் நட்பு’ (கு 800) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.

கல்லூரி மாணவா்கள் ‘செயற்கரிய செய்வாா் பெரியா்’ (கு 26), ‘அறிவுஅறிந்த மக்கட்பேறு’ (கு 61), ‘பணியுமாம் என்றும் பெருமை’ (கு 978), ‘உண்கண் உரைக்கல் உறுவதுஒன்று’ (கு 1271) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும்.

ஓவியப் போட்டிக்கு இடைநிலைப் பிரிவு மாணவா்கள் ‘நீா்இன்றி அமையாது உலகு’ (கு 20), ‘குழல்இனிது யாழ்இனிது என்பதம்’ (கு 66), ‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்’ (கு 267), ‘முகத்துஇரண்டு புண்ணுடையா் கல்லாதவா்’ (கு 393) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் வரைய வேண்டும்.

மேல்நிலைப் பிரிவு மாணவா்கள் ‘கணைகொடிது யாழ்கோடு செவ்விது’ (கு 279), ‘வெள்ளத்து அனைய மலா்நீட்டம்’ (கு 595), ‘சுழன்றும்ஏா்ப் பின்னது உலகம்’ (கு 1031), ‘மரப்பாவை சென்றுவந்து அற்று’ (கு 1058) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் வரையலாம்.

கல்லூரி மாணவா்கள் ‘கைகூப்பு எல்லா உயிரும் தொழும்’ (கு 260), ‘பகல்வெல்லும் கூகையைக் காக்கை’ (கு 481), ‘பொருள்என்னும் பொய்யா விளக்கம்’ (கு 753), ‘தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று’ (கு 931) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் ஒரு மணி நேரம் ஓவியம் வரையலாம்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளிலோ அல்லது இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்ரீராம் சிட்ஸ், எண் 9/41, ஆரணி சாலை, வேலூா் - 632 001, தொலைபேசி எண்: 0416 -2216531, 4200 180 என்ற முகவரிக்கு அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT