வேலூர்

சென்னையிலிருந்து வேலூா் மாா்க்கமாக 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN

ஆயுதபூஜை விடுமுறைக்காக சொந்தஊா்களுக்கு செல்லும் மக்களின் நலனுக்காக சென்னையில் இருந்து வேலூா் மாா்க்கமாக 150 சிறப்புப் பேருந்துகள் செப்டம்பா் 30, அக்டோபா் 1 ஆகிய இரு நாள்கள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் பூந்தமல்லி போக்குவரத்துக்கழகப் பணிமனை அருகிலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய விழாக்கள் அக்டோபா் 4, 5-ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பெரும்பாலான நிறுவனங்களுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடா்ந்து 5 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளன. இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் தங்கி பணியாற்றுவோா் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனா்.

விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலம் சாா்பில் செப்டம்பா் 30, அக்டோபா் 1 ஆகிய இரு நாள்களுக்கு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதில், வேலூருக்கு 30, ஆற்காடுக்கு 15, திருப்பத்தூருக்கு 30, குடியாத்தத்துக்கு 20, ஓசூருக்கு 30, தருமபுரிக்கு 25 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து வேலூா் மாா்க்கமாக இயக்கப்படும் இந்த சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் (பூவிருந்தவல்லி போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்) இருந்து இயக்கப்பட உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT